Blog

Welcome to our blog!

சுதந்திரம்

சுதந்திரம்

கேள்வி: மனிதர்கள் சுதந்திரமாக இருக்கப் பிறந்தவர்களா? பதில்: ஆம், மனிதன் சுதந்திரமாக வாழவே படைக்கப்பட்டான். ஆனால், இன்றைக்குப் பெரும்பாலானோர் ‘சுதந்திரம்’ என்பதற்கு வைத்துள்ள விளக்கம் முற்றிலும் எதிர்மறையானது. எவ்விதக் கட்டுப்பாடும், எல்லையும் இல்லாத ஒரு வாழ்க்கையைத்தான் உலகம் ‘சுதந்திரம்’ என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. ஒருவரிடம் மிகப் பெரிய பரப்பளவில் நிலம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த நிலத்திற்குச் சுவரோ, வேலியோ இல்லையென்றால், உரிமையாளரால் அதை நிம்மதியாக அனுபவிக்க முடியாது. அந்நியர்களின் ஊடுருவலும் ஆபத்தும் தான் அதிகரிக்குமே தவிர,…

அறிவு, புத்தி, புரிதல், ஞானம்

அறிவு, புத்தி, புரிதல், ஞானம்

கேள்வி: அறிவு, புத்தி(சாலித்தனம்), ஞானம் போன்றவைகள் எல்லாம் ஒன்றுதானா? பதில்: ஒன்றோடொன்று தொடர்புடையவை, ஆனால் அனைத்தும் ஒன்றல்ல. வேதாகமத்திலும் இவை அந்தந்த இடங்களுக்கேற்ற பொருள்படத்தான் வருகின்றன. அவற்றிற்கிடையில் இருக்கும் சிறு வேறுபாடுகளை அறிந்துகொள்வது நல்லது. அறிவும் (Knowledge), புத்திசாலித்தனமும் (Intelligence), புரிதலும் (Understanding), ஞானமும் (Wisdom) வேதாகமத்தின் பார்வையில் மனித சிந்தனையின் வெறும் தர்க்க நிலைகள் மட்டுமல்ல, அவை தேவனுடனான உறவிலும் அவருடைய வார்த்தையிலும் வேரூன்றிய ஆன்மீகப் பரிமாணங்கள் என்று சொல்லலாம். இவற்றை ஒரு எளிய உதாரணத்துடன்…

மறந்துவிட்டீர்களா?

மறந்துவிட்டீர்களா?

“டிரான்ஸ்ஃபர் வேணும்னு ஜெவ்ம் பண்ணினேம் பிரதர்..கர்த்தர் உதவி செய்தார்; டிரான்ஸ்ஃபர் கிடைச்சிருச்சி” “சின்னவன் கல்யாணம் நல்லபடியா முடியணும்னு ஜெபிச்சோம்; கர்த்தர் கல்யாணத்தை நல்லா நடத்திக் கொடுத்தார்” “பத்துவருஷம் மூட்டுவலி. சர்ஜரிக்குப் பிறகு நல்ல சொஹம் கெடச்சிருக்கு. எல்லாம் கர்த்தர் கிருபை!” என்பதில் இருந்து, “இது எப்படி நடந்தது என்பதே புரியவில்லை சகோதரா, நெனச்சாலே புல்லரிக்குது; ஆண்டவர் அற்புதம் செய்யனேண்ணா நிலைமை சரியாக ஆகியிருக்க வாய்ப்பே இல்லை”, என்பது வரை… பெறும் நன்மைகள்தான் எத்தனை எத்தனை. இப்படி எக்கச்சக்கமான…

TheTamilBible.com – இணைவசனத் தமிழ் வேதாகம்

TheTamilBible.com – இணைவசனத் தமிழ் வேதாகம்

TheTamilBible.com –  இணையத்தளத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் நிறைவான ஒரு தமிழ் வேத ஆராய்ச்சி அனுபவம் — முற்றிலும் இலவசமாய், ஆஃப்லைனில், என்றும் இனி உங்களுடையதாக. தலைமுறை தலைமுறையாக, ஆழமான வேத ஆராய்ச்சி கருவிகள் என்பவை ஆங்கிலத்தில் மட்டுமே இருந்து வந்தன. தமிழ் விசுவாசிகள் தேவனுடைய வார்த்தையைத் தங்கள் இருதயத்தின் மொழியில் வாசித்தாலும், இன்னும் ஆழமாகத் தோண்டி ஆராய வேண்டும் என்று விரும்பிய பொழுதே — ஒரு குறிப்பிட்ட கருப்பொருளைத் தேடவோ, இணை வசனங்களைப் பின்தொடரவோ…

கிறிஸ்தவக் கஞ்சன்

கிறிஸ்தவக் கஞ்சன்

வால் ஸ்ட்ரீட்டின் ஆகப் பெரிய பிசினஸ் ராஜாக்களெல்லாம் பணத்தை எப்படிப் பெருக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு பெண் பழைய, அழுக்கடைந்த ஒரே ஒரு கருப்பு நிற கவுனை அணிந்துகொண்டு நியூயார்க் வீதிகளில் நடந்து போய்க்கொண்டிருந்தார். அவர், ஹெட்டி க்ரீன். மின்னும் வைரங்களோ, கம்பீரமான அலுவலகங்களோ, பளபளக்கும் ஆட்களோ இவரிடம் இல்லை. கெமிக்கல் நேஷனல் என்கிற ஒரு வங்கியின் ஏதோ ஒரு மூலையில், பழைய ஆவணங்கள் நிறைந்த சில மரப்பெட்டிகளுக்கு நடுவேதான் இவரது சாம்ராஜ்யம் இயங்கியது. பசித்தால் உணவகங்களுக்குப்…

கொழுந்துவிட்டு எரிதல்

கொழுந்துவிட்டு எரிதல்

நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து பெத்லகேமில் பிறந்தபோது அவருக்கு வயது பூஜ்ஜியம் அல்ல. அநேக கிறிஸ்தவர்களின் வேதாகமப் புரிதல் மத்தேயு சுவிசேஷத்தில்தான் தொடங்குகிறது; அவர் 2000 ஆண்டுகளுக்கு முன்புதான் உதித்தார் என்பதுபோல. ஆனால், புதிய ஏற்பாடே எழுதப்படாத அந்தக் காலத்தில், இயேசு தம் சீஷர்களுக்குப் போதித்தது ‘தாம் இருந்த’ பழைய ஏற்பாட்டைத்தான். கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட (Incarnation) நிகழ்வே தவிர, அவருடைய தொடக்கம் அல்ல. அவர் அநாதி தேவன். மீகா தீர்க்கதரிசியின் வார்த்தைகளில்  “அவருடைய புறப்படுதல்…

குற்ற உணர்வை மேற்கொள்வது எப்படி?

குற்ற உணர்வை மேற்கொள்வது எப்படி?

குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும். அது இயல்பானது. கிறிஸ்தவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. எனவே, இரட்சிக்கப்பட்ட அனுபவத்தில் வாழும் கிறிஸ்வர்களுக்கும் குற்ற உணர்வு என்பது சவாலாக சில சமயங்களில் அமைந்துவிடும் விஷயம் என்பதால், இதைக் கொஞ்சம் தியானித்துத் தெளிவாக விளங்கிக்கொள்வது அவசியம். தவறுகளை உணரும் எவரும் முதலில் தேவனிடம் கேட்பது மன்னிப்பைத்தான். ஆனால் கிறிஸ்துவுக்குள் மன்னிப்பை பெற்றுக்கொண்டவர்கள் தங்கள் தவறுகளை உணரும் அளவுக்கு தாங்கள் பெற்ற மன்னிப்பை உணர்வதில்லை என்பதுதான் குற்ற உணர்விலேயே அவர்கள் தொடரக்காரணம். குற்றம் செய்த உள்ளத்தில்…

நன்மைகளைப் பகிருங்கள்

நன்மைகளைப் பகிருங்கள்

நன்மைகளைப் பகிருங்கள் சில வசனங்களை நாம் அதிகமாகப் போதிக்கப்பட்டுக் கேட்டிருக்க முடியாது. அதில் ஒன்று கலாத்தியர் 6:6! “அன்றியும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்கு எல்லா நன்மையானவைகளிலும் பகிர்ந்துகொடுக்கக்கடவன்”. இந்த வசனத்தை நீங்கள் இதுவரை போதிக்கக் கேட்டதில்லை என்றால் அதற்குக் காரணம், நீங்களாகத்தான் இருக்க வேண்டும் அல்லது உங்கள் சபையாகத் தான் இருக்க வேண்டும்! அப்போஸ்தலனாகிய பவுல் தனது நிருபத்தில் இந்த விஷயத்தைக் குறித்து எழுதும்போது அவருக்குள் ஒரு சிறிய தயக்கம் இருந்திருக்கக்கூடும் என்று நாம் தாராளமாக நம்பலாம்….

இறை அங்கீகாரம்

இறை அங்கீகாரம்

தன்னைச் சுற்றியுள்ளவர்கள் தன் உழைப்பையும் அடையாளத்தையும் அங்கீகரிக்க வேண்டும் என்ற ஏக்கம் ஒவ்வொரு மனித மனதின் ஆழத்திலும் இயல்பாகவே குடிகொண்டிருப்பதுதான். ஆனால், அசட்டை பண்ணப்பட்ட மனிதர்கள்தான் இந்த உலகில் பெரும்பான்மையினர்! ஆனால் நம் ஆண்டவர் அப்படியில்லை. விழுந்துபோன மனிதர்களிலும்கூடப் பலரைத் தெரிந்தெடுத்த் தேவன் தன் பிள்ளைகளாக அங்கீகரித்திருப்பதை வேதம் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறது. தேவன் மனிதனைத் தன் கரத்தின் கிரியையாகப் படைத்திருந்தாலும், அவனுடைய விசுவாசத்தையும் உண்மையையும் கண்டு, அவனைப் பாராட்டிப் பெருமைப்படுத்துவதில் தயங்குவதில்லை. வேதாகம வரலாற்றில்,…

வெறும் மூலக்கூறுகளா நாம்?

வெறும் மூலக்கூறுகளா நாம்?

குறைப்பியல் என்று அறிவியலிலும் தத்துவத்திலும் ஒரு கோட்பாடு உண்டு. ஆங்கிலத்தில் Reductionism. இது ஒரு சிக்கலான விஷயத்தை அதன் மிகச்சிறிய பகுதிகளாகப் பிரித்து, அந்தப் பகுதிகளின் தொகுப்புதான் அந்த முழுமை என்று வாதிடும் ஒரு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் குறைப்பியலுக்கு நல்ல உதாரணம் மனிதனை வெறும் ‘உயிரணுக்களின் தொகுப்பு’ (Biological Machine) என்று பார்ப்பது. நவீன அறிவியலாளர்கள் முன்வைக்கும் இந்த விஷயம் விசுவாசிகளுக்குச் சவாலாக அமையலாம். இதை நீங்கள் கேள்விப்பட்டிருக்காவிட்டாலும், இறைவனின் படைப்பாக நாம் எவ்வளவு…