
டீட்ரிச் போன்ஹோஃபர் – சீஷத்துவத்தின் விலை
சென்ற நூற்றாண்டின் முதல் 50 வருடங்கள் பல நாடுகளில் மரணக்களங்களாகத்தான் இருந்தன. குறிப்பாக உலகப் போர்களின் விளைவாக ஐரோப்பா சந்தித்த இழப்புகள் பல இலட்சம். ஆனாலும், அக்காலங்களில் கோழைத்தனமான கொடூரங்களை அரங்கேற்றிய பலர் நடுவில் அவர்களை மிகத்தைரியமாக எதிர்கொண்ட வீரர்களும் தோன்றினர். அவர்களில் ஒருவர் டீட்ரிச் போன்ஹோஃபர் (Dietrich Bonhoeffer) . இவர் ஒரு ஜெர்மானியர், கிறிஸ்தவர். தமிழ்க் கிறிஸ்தவர்கள் அதிகம் அறிந்திராதவர் போன்ஹோஃபர். வரலாற்றின் கருமையான பக்கங்களில் கிறிஸ்துவுக்காக வைராக்கியமாக ஒளிவீசும் நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் இவர்…

பாவமும் பரிசுத்தமும்
கிறிஸ்துவுக்குள் இருப்பவனுக்கு பாவம் என்றால் என்ன என்று அறிவது பெரியவிஷயமே இல்லை. சுருக்கமாக நினைவில் கொள்ள “இதெல்லாம் ஒரு பிரச்சனையா, தப்பா, ஆகாதா என்று கேள்வி வந்தால், அங்கு நிச்சயம் ஏதோ ஒன்று ஒளிந்திருக்கிறது. அது பெரும் குற்றமாக மனதில் பளிச்செனத் தெரியாவிட்டாலும், குற்றத்தின் நிழலான ஏதோ ஒன்றாக – ஒரு மீறுதல், அக்கிரமம் அல்லது பாவமாக இருக்கலாம். கிறிஸ்தவன் என்பவன் பாவத்தை மேலாண்மை செய்பவன் அல்லன். புது சிருஷ்டியாக இருக்கும் அவன், இன்று அவருடைய பரிசுத்ததில்…