
தூங்கும் மிருகம்?
ஓவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் தூங்கிக் கொண்டிருக்கும். அது அவ்வப்போது எட்டிப்பார்க்கும் என்று சொல்வார்கள். அதாவது, நமக்குள் இருக்கும் நன்மையான எண்ணங்களுக்கும், தீமையான எண்ணங்களுக்கும் உருவமும் உயிரும் அளித்தால் நமக்குள் ஒரு நல்ல மனிதனும் தீய மிருகமுமாக நமக்குள்ளேயே இருவர் உண்டு – என்கிற சிந்தனை உலகத்தில் இருந்து வரும் ஒரு சிந்தனை.! சிலருக்கு நல்லவன் வெளியே உலாவிக்கொண்டிருப்பான் – அவர்கள் நல்லவர்கள். சிலருக்கு தீயவன் வெளியே. அவர்கள் மோசமான மிருகங்கள். பெரும்பாலும் நல்லவர்களுக்குள்ளே தூங்கிக்கொண்டிருக்கும் மிருகத்தை…

தொய்ந்துபோன கட்டுமானம்
பாதியில் கட்டப்பட்ட நிலையில் கைவிடப்பட்டுக்கிடக்கும் வீடுகளைப் பார்த்திருக்கிறீர்களா? செங்கல்கள் சிதிலமடைந்து, செடிகொடி முளைத்து, துருப்பிடித்த கம்பிகள் நீட்டிக்கொண்டு- பார்ப்பவருக்கெல்லாம் ஒருவித அவஸ்ததை உண்டாக்கும். நான் தினமும் போகும் வழியில் அப்படிப் பாதியில் நிற்கும் பெரிய கட்டிடம் ஒன்று உண்டு. இன்று பேங்க் லோன் வாங்கிக்கட்டுவதால் இவற்றை அதிகம் பார்க்கமுடியவில்லை என்றாலும், இன்னும் பல மிச்சங்கள் ஆங்காங்கே உண்டு. அப்படி நிற்பவையெல்லாம் எவ்வளவு ஆசைகளுடன் அவை துவக்கப்பட்டிருக்கும்? பெரும்பாலும் அங்கே சிலரது கனவுகள் பாதியில் விழித்தவுடன் கொஞ்சமே நினைவில்…

Mr. கிறிஸ்தவன் SSLC, MBBS:
இதென்னடா தலைப்பு கிறுக்குத்தனமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? இது, தான் யார் என்று அடையாளம் புரியாமல் குழம்பிக்கொண்டிருக்கும் ஒரு கிறிஸ்தவனைப் பற்றியது. தொடர்ந்து பொறுமையாக வாசித்து தியானித்தால் புரியக்கூடும். சபைகளில் நிலவிவந்த குழப்பங்களைப் போக்க பல கடிதங்களை அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியவையே இன்று புதிய ஏற்பாடு முழுவதும் நிரம்பி இருக்கின்றன. அதில் வெவ்வேறு சபைகளுக்குத் தனித்தனியாக நாம் யார் என்பதை உச்சியில் அடித்தார்ப்போல் தெளிவாகப் பவுல் எழுதுகிறார். பெரும் மக்கள்கூட்டமான ரோமர்கள், கிரேக்கர்கள் மற்றும் யூதர்களுக்கு இடையே…

வயசானா சரியாகிவிடும்?
வயதும் அனுபங்களும் மட்டும் ஒரு மனிதனை நல்லவனாக வாழ வைத்துவிடும் என்றால் அறுபது எழுபதைத் தாண்டினால் அனைவரும் நல்லவர்களாகவும், மிகவும் நல்லவர்களாகவும் மாறி இருக்கவேண்டும். ஆனால் உண்மை அப்படி இல்லை என்பது நாம் அறிந்த உண்மை. வேதம் நமக்குப் போதிப்பது நல்லவர்களாக வாழ்வதைக் குறித்த அல்ல. மாறாக இவ்வுலகில் இரட்சிப்பையும் நித்தியமாக தேவனுடன் வாழும் சிலாக்கியத்தை அருளும் தேவ கிருபையையும். அதை நாம் அனுபவங்கள் வாயிலாககப் பெறுவதில்லை. கிறிஸ்துவால் பெறுகிறோம். இந்தக் கிருபை நம்மை நல்லவர்களாக ஆக்க…

முரட்டுப் பக்தர்கள்
ஆங்கிலத்தில் லீகலிஸம் (Legalism) என்கிற வார்த்தை உண்டு. கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரபலமான வார்த்தை இது. இதன் அர்த்தம் “கடவுள் இதைத்தான் செய்யச் சொல்கிறார் என்று அவர் சொல்லாத ஒன்றைச் செய்யச் சொன்னதாக நினைத்துக்கொண்டிருப்பது”. தமிழில் இதைச் சட்டவாதம் என்று சொல்லலாம். “இதைச் செய்தால் சரி, இதைச் செய்யாவிட்டால் உன் அபிஷேகம் அம்பேல். இப்படிச் செய்தால் இரட்சிப்பு போச்சி!” என்று சொந்த விருப்பங்களை வேதம் காட்டும் ஒழுக்க நெறிகளாகத் திணிப்பதே இந்தச் சட்டவாதம். பெந்தேகோஸ்தே சபைகளில்தான் இதை அதிகமாக…

உள்ளுணர்வு… எண்ணங்கள்…சிறைபிடிப்பு
என் விருப்பம் எது, கிறிஸ்துவின் விருப்பம் எது? என்னை எதுவரை அவர் அனுமதிப்பார்? அல்லது, நான் எதையெல்லாம் அவர் அனுமதி பெற்றுச் செய்ய வேண்டும அல்லது பெறாமலேயெ செய்யலாம்? என்கிற கேள்விகள் கிறிஸ்துவுக்குள் வளரும்போது வரும் சில ஆரம்பகால கட்டக் குழப்பங்கள். ஆனால், நம் விருப்பங்கள், எண்ணங்கள் எல்லாம் அவரிடம் இருந்துதான் வரவேண்டும் என்பதுதான் சத்தியம் என்றாலும், பலரும் இதை உடனடியாக விரும்புவதில்லை. எனக்கென்று விருப்பங்களே இருக்கக்கூடாதா? நானாக நல்லவைகளைக்கூடச் செய்யகூடாதா? நானாக எடுக்கும் முடிவுகள் சரியானவையாக…

நீங்கள் vs நீங்கள்
ஒரு கிறிஸ்தவனின் ஆவிக்குரிய நிலை இன்னொரு கிறிஸ்தவனின் ஆவிக்குரிய நிலையுடன் ஒப்பிடப்பட்டு அளவிடப்படுவதில்லை. மாறாக ‘இன்றைய நீங்கள்’ நேற்றைய நீங்களைவிட எப்படி வித்தியாசப்படுகிறீர்கள் என்பதில்தான் வளர்ச்சியைப் புரிந்துகொள்ள இயலும். இந்த மதிப்பீடும்கூட இன்று கிறிஸ்துவுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நேற்று எப்படி ‘அவருக்குள்’ இருந்தீர்கள்? என்று அவரை அடிப்படையாகக் கொண்டதுதான்!. 2025ல் எப்படி கிறிஸ்துவுடனான உங்கள் உறவு எப்படி?, என்பதை உங்கள் 2024டன் எப்படி இருந்தீர்கள்; அல்லது இன்னும் கொஞ்சம் போய், தேவ உறவுக்குள் வரும்முன் இரட்சிப்பை…

மாற்றம்.. உருமாற்றம்
80’ களின் பின்பகுதி மற்றும் 90’ களின் ஆரம்பம் அது. மக்கள் ரிலாக்ஸ்டாக இருந்த கடைசி பத்து வருடங்கள். எல்லோருக்கும் 24 மணி நேரம் போதுமானதாக இருந்தது. பாலங்களிலும், கிரவுண்டுகளிலும் சைக்கிள் கேரியர்களிலும் வாலிபர்கள் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர். பெரியவர்கள் மர்ஃபி ரிச்சர்ட்ஸில் இருந்து கறுப்பு-வெள்ளை சாலிடர், டயனராவுக்கு மாறிக்கொண்டும், பெண்கள் இன்னமும் தங்கள் வீட்டு முற்றங்களில், பக்கத்துவீட்டுப் பெண்களுடன் ‘முந்தாநாள்’ மேட்னிஷோ பேசிக்கொண்டும் மாலைகளை நிதானமாக ரசித்துக்கொண்டிருந்தனர். ஒருவரை ஒருவர் முகத்தைப் பார்த்துக் கவனித் ரசித்துப்…

ஒரு வாழ்நாள் காலம்
தேவன் கிருபையாக அருளும் இரட்சிப்பைப் பெற ஒரு தீர்மானம் மட்டும்போதும்.