
பாவமும் பரிசுத்தமும்
கிறிஸ்துவுக்குள் இருப்பவனுக்கு பாவம் என்றால் என்ன என்று அறிவது பெரியவிஷயமே இல்லை. சுருக்கமாக நினைவில் கொள்ள “இதெல்லாம் ஒரு பிரச்சனையா, தப்பா, ஆகாதா என்று கேள்வி வந்தால், அங்கு நிச்சயம் ஏதோ ஒன்று ஒளிந்திருக்கிறது. அது பெரும் குற்றமாக மனதில் பளிச்செனத் தெரியாவிட்டாலும், குற்றத்தின் நிழலான ஏதோ ஒன்றாக – ஒரு மீறுதல், அக்கிரமம் அல்லது பாவமாக இருக்கலாம். கிறிஸ்தவன் என்பவன் பாவத்தை மேலாண்மை செய்பவன் அல்லன். புது சிருஷ்டியாக இருக்கும் அவன், இன்று அவருடைய பரிசுத்ததில்…

சார்லஸ் (சக்) கோல்சன்: அரசியல் அதிகாரத்திலிருந்து சிறைச்சாலை ஊழியத்திற்கு
சார்ல்ஸ் “சக்” (Chuck) கோல்சன் – தமிழ் கிறிஸ்தவர்கள் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சென்ற நூற்றாண்டு கிறிஸ்தவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க நபர். நாம் அறிந்துகொள்ளவேண்டியவர். அவரது வாழ்க்கை மீட்பின் சாட்சியாகவும், நம்பிக்கையின் செய்தியாகவும் அமைந்த ஒன்று. சுவாரசியமான அவரைப் பற்றி ஒரு சிறு அறிமுகமே இக்கட்டுரை. சென்ற நூற்றாண்டின் நடுவில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒரு சக்திவாய்ந்த அரசியல் செயல்பாட்டாளராக இருந்தவர் சார்ல்ஸ் கோல்சன். பிற்காலங்களில் இரட்சிப்புக்குள்ளாக வந்தபின், சிறைக்கைதிகளுக்காகவும் அவர்கள் சார்ந்த விளிம்பு நிலை…

நாம் ஏன் சிலுவை சுமக்க வேண்டும்?
சிலுவை என்றால் ‘டக்’கென்று நம் மனதில் வருவது இயேசு சுமந்தது சென்ற சிலுவை மரம். சர்ச்களின் மேல், ஆல்டர்களில் இருப்பது, கழுத்துகளில் தொங்கி அலங்கரிப்பது இப்படி. பொதுவாக துயரத்தின் சின்னம். கிறிஸ்தவர்களுக்கு கல்வாரியை அடுத்த நொடி கண்முன் நிறுத்தும். அவர் சுமந்த தடுமாறிச் சென்றது ‘இயேசு’ வாழ்க்கைப் படங்களில் பார்த்தவர்களுக்கு இன்னும் சித்திரமாக மனதில் தோன்றும். இயேசு சிலுவை சுமந்தார், ஆனால், அவர் அப்படிச் சுமக்கும் முன்பே இருவேறு இடங்களில் தம் சீஷர்களையும் ‘அவர்களது’ சிலுவையைச் சுமக்கச்…

தாங்கமாட்டீர்கள் – பாகம் 3
(பாகம் 1) (பாகம் 2) நான்கு சுவிசேஷ நூல்களிலும் நுழைந்து நன்றாக கவனித்தீர்கள் என்றால் இயேசுக்கிறிஸ்து பூமியில் இருந்த காலங்களில் அவர் போதிக்காத வார்த்தை ஒன்று “கிருபை”. இது ஆச்சரியமான விஷயம் தான். அவர் வாயில் இருந்து கிருபை என்கிற வார்த்தை வெளிப்படவில்லை. ஆனால், அதற்குக்காரணம் சாதாரணமானதே. கிருபை என்கிற – யூதர்கள் நன்றாக அறிந்திருந்த வார்த்தையை அவர் போதிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவு வாழ்ந்துகாட்டினார். தன் ஒவ்வொரு செயல்களிலும் கிருபையை வெளிப்படுத்தினார். வருடக்கணக்கில் நோயுற்றுக்கிடந்தவர்களை…

விடுதலைக்குத் தடை!
இரட்சிப்பில் பாவமன்னிப்பு என்பது நமக்குள் பிரதானமாக வந்திருக்கும் ஆசிர்வாதம். ஆனால், அத்துடன் அந்த ஆசிர்வாதம் நிறுவவிடுவதில்லை. மாறாக பாவத்தின் விளைவுகளால் வந்த விஷயங்களில் இருந்தும் நம்மை தேவன் தொடர்ச்சியாக பல நிலைகளில் விடுவிக்கிறார்; விடுவித்துக்கொண்டிருக்கிறார்; இன்னமும் விடுதலை செய்வார்! எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான் என்று சங்கீதக்காரன் எழுதும்பொழுது இரட்சிப்பின் ஆசிர்வாதமான இந்த விடுதலையை உணர்ந்து பாடலாக்கியிருக்கிறார்….

கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்…!
இயேசு நினைத்தால் “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது” என்று ஒற்றை வாக்கியத்திலோ, “எல்லோர பாவங்களையும் நான் மன்னித்துவிட்டேன் வாங்க என்னோடு பரலோகத்துக்கு” என்றோ சொல்லி நம் எல்லோரையுமே மன்னித்திருக்கலாமே? அதை அவர் இறைவனாக இருந்துகொண்டே செய்திருக்கலாமே? இதற்காக இந்த பூமியில் அவதரித்ததெல்லாம் அவசியமா? இப்படியெல்லாம் சிந்தித்தது உண்டா? இல்லையென்றால் இப்போது சிந்தித்துவிடலாம். அப்படிச் செய்ய அவருக்கு வல்லமை உண்டு தான். ஆனாலும், அப்படிச் செய்யாமல், இன்னும் சிறப்பான, நியாமான முறையில் செய்வதுதான் அவருக்கு அது அவசியமாகத் தோன்றியது! காரணம்…

கல்வாரி சிந்தனைகள் -2
ஒரு பாத்திரத்தைச் சுத்தமாக்க வேண்டுமானால் நீர் வேண்டும் அல்லது ஒரு சிறு துண்டு துணியாவது வேண்டும். அதாவது, எதைச் சுத்தமாகக வேண்டுமானாலும் வேறு ஏதாவது ஒன்று வேண்டும்; நீர், நெருப்பு இப்படி ஏதாவது ஒன்று. இப்படி ஒரு பாத்திரத்தைக் கூட வெளிப்புறப்பொருள் ஒன்றைக் கொண்டுதான் சுத்தமாக்க இயலும் என்கிறபோது மனிதன் மட்டும் தன் அகத்தைச் சுத்தமாக்கிக் கொள்ளத்தன்னால் இயலும் என்று நினைப்பது விந்தை. இதை அறிந்தவர் கிறிஸ்து. எனவே, தன் இரத்தம் கொண்டு நம் இரத்தம் சுத்திகரிக்க…

கல்வாரி சிந்தனைகள்-1
இவ்வுகவரலாற்றை மட்டுமல்ல, இரட்சிக்கப்படுகிற ஒவ்வொருவருடைய வரலாற்றையும் இரண்டாகப் பிரிக்கிறது சிலுவை. கிறிஸ்துவின் சிலுவைக்கு முன் சிலுவைக்குப்பின் என்று ஒவ்வொரு கிறிஸ்தவனின் வாழ்வும் பெரும் பிரிவாகப் பிரிக்கப்படுவது நிச்சயம். கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம். தேவகோபாக்கினைக்குத் தப்பிக்கொண்டோம். ——————————————————————————————————— இவன் தன்னைத் தேவனுடைய குமாரன் என்று சொல்கிறான், இது யூதர்களின் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமானது என்று வேதபாரகர் முதலில் இயேசுவின்மேல் குற்றம்சாட்டத்துவங்கினர். ரோமச் சட்டங்களின்படி இது ஒரு பெரியவிஷயமாகவும், இதெல்லாம் இயேசுவை மரணதண்டனைக்கு உரியவராகக் காட்டவில்லை என்று கருதிய பிலாத்து இவனிடத்தில் ஒரு குற்றமும்…