வேதவாசிப்பு – ஜெபம்

உறவாடல்…உரையாடல்

நான் பைபிள் மட்டுமே வாசிக்கிறேன்.

நான் பைபிள் மட்டுமே வாசிக்கிறேன்.

எத்தனை புத்தகங்களையும் படியுங்கள். ஆனால், வாழ்வது வேதத்தின்படி இருக்கட்டும் என்றார் போதகர் சார்ல்ஸ் ஸ்பர்ஜன். புத்தகம் வாசிப்பவர்களுக்கு முன் இருக்கும் சவால், வாசிக்கிறேன் பேர்வழி என்று வேதவாசிப்பைக் குறைத்துவிடக்கூடும் எனபதுதான். இது அபாயமான சவால். புத்தகம் வாசிக்காமல் நான் வேதம் மட்டுமே வாசிப்பேன் என்று சொல்பவர்கள் வைக்கும் நியாயமான கருத்தும் இந்த அபாயத்தைக் கருதிதான். ஆனால், புத்தகம் வாசிப்பவர்கள் எந்தச் சாக்குப் போக்கும் சொல்ல இயலாதபடி அவற்றை எதற்காக வாசிக்கிறோம் என்கிற தெளிவிருந்தால் இந்த அபாயத்தை சுலபமாக…

தொய்ந்துபோன கட்டுமானம்

தொய்ந்துபோன கட்டுமானம்

பாதியில் கட்டப்பட்ட நிலையில் கைவிடப்பட்டுக்கிடக்கும் வீடுகளைப் பார்த்திருக்கிறீர்களா? செங்கல்கள் சிதிலமடைந்து, செடிகொடி முளைத்து, துருப்பிடித்த கம்பிகள் நீட்டிக்கொண்டு- பார்ப்பவருக்கெல்லாம் ஒருவித அவஸ்ததை உண்டாக்கும். நான் தினமும் போகும் வழியில் அப்படிப் பாதியில் நிற்கும் பெரிய கட்டிடம் ஒன்று உண்டு.  இன்று பேங்க் லோன் வாங்கிக்கட்டுவதால் இவற்றை அதிகம் பார்க்கமுடியவில்லை என்றாலும், இன்னும் பல மிச்சங்கள் ஆங்காங்கே உண்டு. அப்படி நிற்பவையெல்லாம் எவ்வளவு ஆசைகளுடன் அவை துவக்கப்பட்டிருக்கும்?  பெரும்பாலும் அங்கே சிலரது கனவுகள் பாதியில் விழித்தவுடன் கொஞ்சமே நினைவில்…

எண்ணாகமம் – என்ன ஆகமம்?

எண்ணாகமம் – என்ன ஆகமம்?

அதிகம் பேரால் வாசிக்கப்படாத ஒரு புத்தம் வேதாகமத்தில் இருக்கிறது என்றால் அது அநேகமாக இந்தப் புத்தகம்தான். வேதாகமத்தை வருடத்திற்கு இத்தனை முறை படித்தாகவேண்டும் என்கிற கட்டாயத்துள் தங்களை வைத்திருப்பவர்கள் இந்தப் புத்தகத்தைக் கடந்தது எப்படி என்பதை அவர்கள்தான் விளக்கவேண்டும். 🙂  முதல் பத்து அதிகாரங்கள் சற்று விளக்கமாக சில முறைமைகளைக் கொண்டிருப்பது உண்மைதான். வெகு விளக்கமாக வரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, பாளையம் இறங்கவேண்டிய இடங்கள், மோசே மற்றும் ஆரோனின் வம்ச வரலாறு, ஆசரிப்புக்கூடாரத் திட்டங்கள், அவர்களது பணிகள்,…

என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்!

என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்!

காத்திருப்பு கடினம். சில நிமிடம் கம்யூட்டர் boot ஆகும் நேரம் என்றாலும் சரி,  ஒரு அலுவலகத்தில் வரவேண்டியவர் வந்து உட்காரவேண்டியவர் வரும் வரை அந்த சீட்டையே பார்த்துக்கொண்டிருப்பதும் சரி… கடினம்தான். எனக்கு பில்லிங் கவுண்டர்களில் காத்திருப்பது கொஞ்சம் சலிப்பையும் உண்டுபண்ணும். பொருளை வாங்கிக் காசு கொடுக்கக் காத்திருக்க வேண்டுமா? என்று நினைப்பதுதான் காரணம்! வாட்ஸப்பில் இரண்டு ப்ளூடிக்குகள் வரும்வரை காத்திருக்கமல் ஃபோன் போட்டுவிடுபவர்கள் உண்டு. காத்திருப்பு அவஸ்தை!.  காரணம் அது நம்மிடம் இருக்க வேண்டிய, ஆனால் இல்லாத…

என் நாமத்தில் எதைக் கேட்டாலும்

என் நாமத்தில் எதைக் கேட்டாலும்

என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன் (யோவான் 14:14) என்ற வசனம் சிறுவயதில் இருந்தே நமக்குப் பிடித்த வசனங்களுள் ஒன்றாக இருக்கும். என்னிடம் எதைக் கேட்டாலும் நான் தருவேன் என்று சிம்பிளாகச் சொல்லாமல், ஆரம்பத்திலேயே வருகிறதே ஒரு வார்த்தை. “என் நாமத்தினாலே…” என்று. அதென்ன? இயேசுவின் நாமத்தில் பிதாவே என்று தானே நாம் ஜெபித்துமுடிக்கிறோம். அப்படி முடிப்பதுதான் “என் நாமத்தினாலே” ஜெபிப்பதா? இதற்கு பதில் தெரிய, எதைக் கேட்டாலும் செய்வேன் அல்லது தருவேன் என்பதை…

இதயமாற்று சிகிச்சை

இதயமாற்று சிகிச்சை

ஜெபத்தில் உங்கள் இருதயத்தை தேவனிடத்தில் கொண்டு செல்லுபோதெல்லாம் அவருடைய இருதயத்தை நாம் பெற்றுக் கொள்கிறோம் என்றார் கிறிஸ் லன்கார்ட்.  அதாவது, ஒவ்வொருமுறை ஜெபிக்கும்போதும் ஒரு இருதய மாற்று சிகிச்சையை உணர்ந்தால், அதுதான் சரியான ஜெபம்.  ஆவிக்குறிய வாழ்வின் ஆரம்பத்தில் இச்சிகிச்சை கடினமானது தான். ஆனால், அந்தக் கடினத்திற்குக் காரணம் அவரல்ல, நம் இருதயமே! நம் இருதயத்தின் தன்மை, அதன் போக்கு என்று எல்லாவற்றையும் என்றோ அறிந்தவர் அவர் என்பதை, நம் இருதயம் (நாம்) ஏற்கத் தாமதாவதால் ஏற்படும்…

பரமண்டல ஜெபம்

பரமண்டல ஜெபம்

தேவனிடம் நாம் பேசுவது, தேவன் நம்மோடு பேசுவது என்று இரண்டும் இணைந்த அனுபவமே ஜெபம். ஆவிக்குறிய வாழ்வின் தொடக்க காலங்களில், நாம் மட்டுமே அவரோடு பேசிக்கொண்டிருப்பது போன்று தோன்றினாலும், பின்னர் அவரும் நம்மோடு பேசும் உரையாடலாக ஜெபங்கள் மாறுவதை, நாம் அனுபவித்து மகிழ்வது உறுதி. அதன்பின், நம் ஜெபங்களும் முறைப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களாகவும், பெறும் பதில்களை ஏற்றுக்கொள்ளும் முதிர்ச்சியான அனுபவங்களாகவும் மாறுவதை இந்த இறைஉறவில் உறுதி செய்துகொண்டே இருப்போம்.இயேவின் சீடர்கள் அவரது ஜெபவாழ்வை அருகில் இருந்து பார்த்தனர். அவரது…