
ஒரு நேரத்தில் ஒரு அடி
இரவுகள் இருளாக இருந்த காலங்கள் அது. இன்று போல லைட் ஃபொல்யூஷன் இல்லாத காலங்கள். இன்று நகரங்களில் மட்டுமல்ல, குறுநகரங்களில் கூட ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சி இருளை மறைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், சில ஆயிரம் ஆண்டுகள் முன்பு – அன்று ஒரு இரவில் ஆபிரகாமால் தேவன் வானத்தைப் பார்க்கச்சொன்ன போது சுமார் 20000 நட்சத்திரங்களைப் பார்த்து, எண்ணி இருக்க முடியுமாம். இன்று பல நாட்களில் நம்மால் அது இயலாது. நட்சத்திரங்களைக் கோள்களைப் படமெடுக்க விண்வெளிப் புகைப்பட ஆர்வலர்கள் இருளைத்தேடி அலைகிறார்கள்….

திரித்துவம் அல்லது திரியேகத்துவம்
குறிப்பு: கட்டுரையின் நோக்கம், ஏற்கனவே திரித்துவத்தை ஆராய்ந்து அறிந்தவர்களுக்கு இன்னும் ஒரு கோணத்தில் சிந்திக்க ஒரு சிறு உதவியாக இருப்பது மட்டுமே. கொஞ்சம் கவனத்துடன் வாசித்தால் சில புதுப் பரிமாணங்களில் நீங்களும் அவரைக் குறித்துச் சிந்திக்கலாம்! கிறிஸ்தவத்தில் திரும்பத் திரும்பப் போதிக்கப்படுவதும் விசுவாசிக்கப்படுவதுமான உபதேசம் திரித்துவம் அல்லது திரியேகத்துவம். இறைவன் மூவராக இருக்கும் ஒருவர் என்பதே திரித்துவம். இப்படிச் சொல்வதைப் புரிந்துகொள்வதில் நிச்சயம் சிரமம் இருக்கும். ஆனால், அது இயல்பானது. காரணம் எந்த நேரத்திலும் மனிதராக இருக்கும்…

உபதேசங்களாகக் கற்றுக்கொள்ளுங்கள்
வசனங்கள் நம் இருதயத்தில் இருப்பது மிகவும் அவசியம். ஆனால், வசனங்களை மாத்திரம் அறிந்து வைத்திருக்காமல், முழுமையான உபதேசங்களையும் அறிந்து வைத்திருப்பதுதான் கிறிஸ்த வாழ்வின் வெற்றி இரகசியம். யோவான் 3:16இல் இரட்சிப்பு இயேசு வழியாக என்று அறிந்து, அவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பாவ மன்னிப்பைப் பெற்று கிறிஸ்தவராக சபையில் சேர்க்கப்படுவது என்பது அந்த ஒற்றை வசனத்தால் நடப்பது அல்ல. மாறாக ஒரு முழுமையான இரட்சிப்பின் சத்தியத்தை உபதேசமாக அறிந்திருப்பதன் மூலம்தான். கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை உபதேசங்களை பல வசனங்களை…