
சார்லஸ் (சக்) கோல்சன்: அரசியல் அதிகாரத்திலிருந்து சிறைச்சாலை ஊழியத்திற்கு
சார்ல்ஸ் “சக்” (Chuck) கோல்சன் – தமிழ் கிறிஸ்தவர்கள் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சென்ற நூற்றாண்டு கிறிஸ்தவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க நபர். நாம் அறிந்துகொள்ளவேண்டியவர். அவரது வாழ்க்கை மீட்பின் சாட்சியாகவும், நம்பிக்கையின் செய்தியாகவும் அமைந்த ஒன்று. சுவாரசியமான அவரைப் பற்றி ஒரு சிறு அறிமுகமே இக்கட்டுரை. சென்ற நூற்றாண்டின் நடுவில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒரு சக்திவாய்ந்த அரசியல் செயல்பாட்டாளராக இருந்தவர் சார்ல்ஸ் கோல்சன். பிற்காலங்களில் இரட்சிப்புக்குள்ளாக வந்தபின், சிறைக்கைதிகளுக்காகவும் அவர்கள் சார்ந்த விளிம்பு நிலை…